BLOG

கங்கைகொண்ட சோழபுரம்|அரியலூர்1

கங்கைகொண்ட சோழபுரம்

Gangaikondacholapuram main entrance view 1 கங்கைகொண்ட சோழபுரம்|அரியலூர்1
கங்கை கொண்ட சோழபுரம்

தஞ்சாவூரில் தந்தை கட்டிய கோயில் ஆண்மையின் கம்பீரம் என்றால், கங்கை கொண்ட சோழபுரத்தில் மகன் கட்டியதோ பெண்மையின் பேரழகு.

அதாவது பெரிய கோயில் விமானத்தில் காணப்படாத நெளிவுகள், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் காணப்படுவது பெண்ணின் நளினத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது.

இதன் காரணமாகவே பெரிய கோயிலைப் போன்றே கட்டப்பட்டிருந்தாலும், சோழபுரம் கோயிலைப் பார்க்கின்றபோது ஒரு பெண்ணைப் பார்ப்பதுபோன்ற புது உணர்வு உண்டாகிறது.

சரி, கொஞ்சம் இந்த ஆண், பெண் விளையாட்டை ஒதுக்கிவைத்துவிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தின் பக்கங்களை கொஞ்சம் புரட்டுவோம்!!!

பெருவுடையார் கோயில் தஞ்சாவூரிலிருந்து 72 கி.மீ தொலைவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் என்ற சிற்றூரில் பெருவுடையார் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கும் தஞ்சை பெரிய கோயிலைப் போன்றே பெருவுடையார் கோயில் என்றே பெயர் இருப்பினும், இதன் அமைவிடமான கங்கைகொண்ட சோழபுரத்தின் பெயரிலேயே பிரபலமாக அழைக்கப்படுகிறது.

Gangaikondacholapuram Big Nandi3 1 கங்கைகொண்ட சோழபுரம்|அரியலூர்1
கங்கை கொண்ட சோழபுரம்

1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்றதோடு கங்கையையும் வெற்றிகொண்டான். அந்த வெற்றியின் காரணமாக ‘கங்கை கொண்ட சோழன்’ என்ற பட்டப்பெயரும் அவனுக்கு வழங்கப்பட்டது. அதோடு அந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற இந்த ஊரும் நிர்மாணிக்கப்பட்டது. அதேவேளை கலைப்பொக்கிஷமான இந்த பெருவுடையார் கோயிலும் கட்டப்பட்டது.

கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அதிகமான பெயர்கள் உள்ளன. அதில் பண்டைய காலத்து புலவர்கள்  கங்காபுரி, கங்கை நகர் கங்காபுரம் என்ற  பெயர்களில் இவ்வூரை அழைத்தனர். இராஜேந்திர சோழன் 1019இல்  கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களை இராஜேந்திர சோழன் வெற்றிக் கொண்டதால்.

இதன் காரணமாக சிவனுக்கு  கங்கைகொண்ட “சோழீசுவரர் கோயில்” எனும் மாபெரும் கோவிலை அமைத்தார். கங்கை வரை பெற்ற வெற்றிகளின் காரணமாக கங்கை கொண்ட சோழப் பேரேரி  என்றும் அழைக்கப்பட்டது.  அதோடு இதற்கு  “சோழகங்கம்” என்றும் அழைக்கப்பட்டது.

இராஜ இராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் மிக சிறந்த அரசனாக ஆட்சி புரிந்து உள்ளார். இவர் 1012 – 1044 ஆண்டில் கடல் கடந்து தன்னுடைய  ஆட்சியை நிலைநாட்டினார்,  அதன் பிறகு இவர் தஞ்சையில் கட்டப்பட்ட கோவிலை போல அரியலூரில் கட்டினார்.

இந்த கோவிலை கட்டி முடித்த பிறகு இந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு இவரிடம் போரில் தோற்று போன மன்னர்களை கங்கையிலிருந்து நீரை எடுத்து அதை தலையில் சுமந்து வர சொல்லி அபிஷேகம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றன. இதன் காரணமாகத்தான் கங்கைகொண்ட சோழபுரம் என்று பெயர் வந்தததுக்கு முக்கிய  காரணம் என்று  சொல்லப்படுகிறது.

கோயில் விமானம்

தஞ்சை பெரிய கோயிலின் விமானம் 216 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்க, கங்கைகொண்ட சோழபுரம் கோயில் விமானத்தின் உயரமோ 160 அடியே ஆகும். அதேபோன்று 13 நிலைகள் கொண்ட பெரிய கோயில் விமானத்தோடு ஒப்பிடுகையில் சோழபுரம் கோயில் விமானத்தில் 8 நிலைகளே உள்ளன.

Gangaikondacholapuram Steps to main deity 1 கங்கைகொண்ட சோழபுரம்|அரியலூர்1
கங்கை கொண்ட சோழபுரம்

ஆனால் நம் உள்ளங்களை கவரும் கவின் கொஞ்சும் வளைவுகள் சோழபுரம் கோயில் விமானத்தில் காணப்படுவதால், அதற்கு ஒரு பெண்ணியல்பை இவைத் தருகின்றன.

கோட்டையும், கோயிலும்! கங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஒருகாலத்தில் கோயிலாக மட்டுமில்லாமல் சிறந்த கோட்டையாகவும் விளங்கியிருக்கிறது. இப்போதும் கோயிலின் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரணும், மேற்கே சிறிய அரண் ஒன்றும் உள்ளது.

இந்த கோவிலின் முதன்மைக் கருவறைச் சுவற்றின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீஸ்வரர், நடராசர் போன்ற சிவனின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த  கோவில் முழுவதும்  பிரம்மன், துர்க்கை, திருமால், சரஸ்வதி போன்ற கடவுள்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட  சிற்பங்கள் உள்ளன.

அதில் ஒரு சிற்பம் சிவன் ஒரு அடியாருக்கு மாலை அணிவது போல அமைந்திருக்கும். இந்த கோவிலில் ஒற்றை கால்களால் ஆன நவக்கிரகமும் உள்ளது.  அதோடு மட்டுமில்லமால் சோழர் கலைகளுக்கு சான்றாக விளங்கும் வெண்கலச் சிலைகளும்  இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றில் சில சிலைகள்  சுப்பிரமணியர் திருவுருவ வெண்கலச் சிலை என்றும் கருதப்படுகிறது.

மண்டபம் 340 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலின் மண்டபம் 175 அடி மற்றும் 95 அடி நீள அகலத்துடன் காட்சியளிக்கிறது. அதோடு மண்டபத்தையும், கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி ஒன்று அமைந்துள்ளது.

Gangaikondacholapuram Singamuga keni Lion Well 1 கங்கைகொண்ட சோழபுரம்|அரியலூர்1
கங்கை கொண்ட சோழபுரம்

தஞ்சாவூர் கோயிலில் இருப்பதுபோன்றே இந்த இடைவழியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணைக் கவரும் துவார பாலகர்களுடனும், படிக்கட்டுகளுடனும் மிளிர்கின்றன.

140 தூண்கள் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது.

அது தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்கிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.

அம்மனுக்கு தனிக்கோயில் கங்கைகொண்ட சோழபுரம் கட்டப்பட்ட காலத்திலேயே அம்மனுக்கும் ஒரு தனிக் கோயில் இங்கு கட்டப்பட்டுள்ளது. ஆனால் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சந்நிதி, கோயில் கட்டிய பின் 200 ஆண்டுகளுக்கு பின்னர் 13-ஆம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

 

கங்கை கொண்ட சோழபுரம் அகழாய்வு:

கங்கை கொண்ட சோழபுரத்தின் அகழாய்வின் பொழுது சில அடி ஆழத்தில் செங்கற்களால் ஆன பதின்மூன்று சுவர்கள் இருந்தன. இதனை தவிர சில செப்புக் காசுகள், பானை ஓடுகள், இரும்பு பொருட்கள் ஆகியவையும் கிடைத்தன. அதோடு அங்கு சீன மட்பாண்டமும் கிடைத்துள்ளது. தற்பொழுது அங்கு தோண்டப்பட்ட ஐந்து குழிகளில் மட்டுமே 13 சுவர்கள் சுமார் நான்கைந்து மீட்டர் தூரத்திற்கு கிடைத்திருக்கிறது.

கங்கை கொண்ட சோழபுரம் சிறப்புகள்:

gangai 1 கங்கைகொண்ட சோழபுரம்|அரியலூர்1
கங்கை கொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரமானது மிகப்பெரிய லிங்கத்தை கொண்ட கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள  லிங்கத்தின் 13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவையும் கொண்டுள்ளது.

இந்த கோவிலில் இருக்கும் நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டவையாகும். அதோடு மட்டுமில்லாமல்  இந்த சுண்ணாம்பு கல் நந்தியில் விழும் சூரிய ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது போல அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கங்கை கொண்ட சோழபுரத்தின் சிறப்பு என்னவென்றால் வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் குளிர்ச்சியை கொடுத்து, அதிகம் குளிர் இருக்கும் நேரத்தில் வெப்பத்தை கொடுக்கும் சிறப்புகளை கொண்டுள்ளது.

பிரஹதீஸ்வரர் கங்கைகொண்ட சோழபுரத்தில் லிங்க வடிவில் காட்சிதரும் பிரஹதீஸ்வரர்.

சண்டேச அனுக்ரஹ மூர்த்தி தஞ்சை பெரிய கோயிலில் இல்லாத சிறப்பாக இந்தச் சிற்பத்தை பலர் குறிப்பிடுகின்றனர். அருகில் பார்வதி வீற்றிருக்க, காலடியில் பக்தியுடன் கைகூப்பியபடி அமர்ந்திருக்கும் சண்டேசருக்கு சிவன் பரிவட்டம் கட்டுகிறார்

சிம்ஹகேணி கோயிலின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிம்ஹகேணி என்பது சிங்கத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் கிணறு.

நந்தி கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்த நந்தி இந்தியாவின் மிகப்பெரிய நந்திகளில் ஒன்று.

துவாரபாலகர்கள் நுழைவாயிலில் பிரம்மாண்டமாக காட்சிதரும் துவாரபாலகர்கள்.

நடராஜர் அற்புத வேலைப்பாடுகளுடன் அமைந்த நடராஜர் சிலை.

இசைக்கலைஞர்கள் நாதஸ்வரம் மற்றும் தவில் வாசிக்கும் கலைஞர்கள்.

பிரம்மா பிரம்மனும், தேவதைகளும்.

இரண்டு நந்திகள்:

gangai1 1 கங்கைகொண்ட சோழபுரம்|அரியலூர்1
கங்கை கொண்ட சோழபுரம்

 

 

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் சிவபெருமானுக்கு முன்பு இரண்டு நந்திகள் இருக்கின்றன. இவற்றில் பெரிய நந்தி மண்டபத்துக்கு வெளியேயும், சிறியது மண்டபத்தின் துவக்கத்திலும் அமையப்பெற்றுள்ளன.

கோயில் கிணறு கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கிணறு.

மஹிசாசுரமர்த்தினி மஹிசாசுரனை சம்ஹாரம் செய்யும் துர்கா தேவி.

சிவ வழிபாடு ஒரு பெண் சிவபெருமானை வழிபடுவது போன்று கோயில் சுவற்றில் வடிக்கப்பட்டுள்ள சிற்பம்.

சிதைந்த சிற்பங்கள் கோயில் வளாகத்தில் உள்ள சிதைந்த மற்றும் முடிக்கப்படாத சிற்பங்கள்.

சரஸ்வதி ஞான சரஸ்வதியின் சிற்பம்.

Gangaikondacholapuram Tower view3 1 கங்கைகொண்ட சோழபுரம்|அரியலூர்1
கங்கை கொண்ட சோழபுரம்

முடிக்கப்படாத மண்டபம் நிறைய தூண்களுடன் காட்சியளிக்கும் முடிக்கப்படாத மண்டபம்

அந்திவேளையில்… கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் அந்திவேளை தோற்றம்

சோழ கேரளன் திருமாளிகை ராஜேந்திர சோழனின் பட்டப்பெயர்களில் ஒன்றான ‘சோழ கேரளன் திருமாளிகை’ கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு காலத்தில் இருந்துள்ளது. ஆனால் அதன் சுவடுகள்தான் இன்று நமக்கு கிடைத்துள்ளன. இந்த அரண்மனையிலிருந்து, சோழபுரம் பெருவுடையார் கோயிலுக்கு சுரங்கப்பாதை ஒன்றும் அமைந்திருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆலமரம் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஆலமரம்.

எப்படி அடைவது? தஞ்சாவூரிலிருந்து 72 கி.மீ தொலைவில் கும்பகோணம், அணைக்கரை வழியாக ஜெயங்கொண்டம் போகும் வழியில் கங்கைகொண்ட சோழபுரம் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *