மதுரை மீனாட்சி அம்மன் கோயில்1
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு
அந்த வகையில் பலரும் அறியாத, கண்டுகொள்ளாத ஒரு உடைந்த சிவலிங்க சிலை அங்கிருக்கின்றது. அந்த சிவலிங்கத்தின் கதையை கேட்டால் மீனாட்சி அம்மன் கோயிலின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும். அதோடு அடுத்த முறை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றால் அதை கவனமாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
உடைந்த சிலையின் வரலாறு
பல்வேறு கோயில்கள் அந்நியர்களின் படையெடுப்பின் போது சிதைக்கப்பட்டு, அங்கிருந்த செல்வங்கள் கொள்ளை அடைத்து செல்லப்பட்டது நாம் அறிந்ததே.
கிபி 1330ஆம் வருடம் முகமதியர்கள் தமிழகத்தில் புகுந்து கொள்ளையடிக்க தொடங்கிய போது, மதுரையை “வாளால் விழித்துறங்கும் பராக்கிரம பாண்டியன்” என்ற மன்னன் ஆண்டு வந்தார். முகமதியர்கள் தமிழகத்தில் புகுந்ததும், இம்மன்னர் மதுரையை வீட்டு காளையார் கோயிலுக்குச் சென்றுவிட்டார்.
பெரிய கோபுரங்கள் உடைய கோயில்
அப்படி தமிழகத்தில் மிக பிரபலமான கோயில்களில் ஒன்று தான் மீனாட்சி அம்மன் திருக்கோயில். பொற்றாமரை குளம், ஆயிரங்கால் மண்டபம், புது மண்டபம், மிக பெரிய கோயில் அமைப்பு, மரகத மீனாட்சி, கால் மாறி ஆடிய நடராஜர், முத்தமிழ் பறைசாற்றும் கோயில் என பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டது.
படையெடுப்பு
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஸ்தானிகர்கள் முகமதியர் படையெடுப்பில் இருந்து, திருக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தையும் மீனாட்சி அம்மன் திருவுருவத்தையும் காப்பாற்றுவதற்காக சுவாமி கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கம் திருமேனி மூடி அதன் மேல் ஒரு கிளிக்கூடு அமைத்து, அதன் மேல் மணலை பரப்பி கருவறை வாயிலையும் கல்லினால் சுவரெடுத்து அடைத்தனர்.
கருவறைக்கு முன்புள்ள அர்த்தமண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை ஸ்தானிகர்கள் வைத்து விட்டனர். பின்னர் முகமதியர் படையெடுப்பின் போது முகமதியர் படைவீரர்கள் அர்த்தமண்டபத்தின் முன்பு இருந்த சிவலிங்கத்தைச் சோமசுந்தரர் திருவுருவச்சிலை என்று எண்ணி அதை கடப்பாறையால் தாக்கி சிதைக்க முற்பட்டனர். அந்த சிவலிங்கம் தான் மீனாட்சி அம்மன் கோயிலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
48 ஆண்டுகள் பூஜை இல்லாத கோயில்:
முகமதியர்களின் தாக்குதலால் 48 ஆண்டுகள் கருவறை அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது. பிறகு கம்பண்ணர் படை எடுத்து முகமதியர்களை வென்று கோயில் ஸ்தானிகர்களுடன் வந்து
இந்த சிவலிங்கத்தை அகற்றி வைத்து விட்டு கருவறையின் மேலிருந்த மணல்குன்றை எடுத்துவிட்டு கருவறையைத் திறந்து பார்த்தபோது சொக்கலிங்கப் பெருமானின் திருமேனியில் 48 ஆண்டுகளுக்கு முன்னர் பூசிய சந்தனம் நறுமணத்துடன் காட்சி தரவும், திருமேனியின் பக்கங்கலில் இரண்டு வெள்ளி விளக்குகள் சுடர்விட்டு எரிந்து கொண்டிருப்பதையும் கண்டார்.
அன்றிலிருந்து தினசரி பூஜைகள் முறையாகத் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த குறிப்புகள் திருக்கோயில் சீதள புத்தகத்தில் இவ்விவரம் குறிக்கப்பட்டுள்ளது.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலகமே வியந்து பார்க்கும் ஒன்றாக நிற்கிறது. உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து செல்கின்றனர். தமிழ்நாட்டின் முத்திரையாக விளங்கும் இந்த கோயில் பல வரலாற்று சிறப்பம்சங்களையும் பெற்றுள்ளது.
மதுரைக்காரர்கள் மட்டுமில்லை ஒட்டுமொத்த தமிழர்களும் இதை நினைத்து பெருமை கொள்கின்றனர். எனவே இந்த பதிவில் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வரலாற்று பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள். சித்திரை திருவிழா தொடங்கி இங்கு நடைபெறும் திருத்தேர் பவனி, ஆவணி மூல திருவிழா, தை தெப்பத் திருவிழா, ஆடிப்பூரம் ஆகியவை மிகவும் விசேஷம் கொண்டவை.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மொத்தம் 65,000 சதுர அடிப் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆகம விதிகளை கடுமையாகக் கடைப்பிடித்துக் கட்டப்பட்ட இந்த கோயிலின் முக்கிய வரலாறு இதுதான். அன்னை பார்வதியின் மறு உருவமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோலத்தில் வந்த சிவனை திருமணம் செய்து கொண்டு மதுரைக்கு,
மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற கோலத்தில் வந்தார். தெய்வ மகளான மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரான சிவனுக்கும் மதுரையில் கட்டப்பட்ட கோயில் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.
அம்மன் சிலை வடிவம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சிலை மரகத கல்லால் வடிவமைக்கப்பட்டவை. பக்தர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்து தரிசித்தாலும் அம்மன் ஜொலிப்பது போன்று காட்சியளிப்பார். கோயிலின் உள்ளே அமைந்திருக்கும் 51 சக்தி பீடங்களும் பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது.
கோயில் வளாகத்தில் வலது புறத்தில் இருக்கும் நடராஜர் சிலையை பார்க்கும் போதே மனம் பரவசமடையும். நடராஜர் சிலை மற்ற கோயில்களில் இருப்பதைப் போன்று இல்லாமல் இடது காலுக்குப் பதில், வலது கால் தூக்கி நடனமாடுவது போல் வீற்றிருப்பார். ராஜசேகர பாண்டியன் வைத்த வேண்டுகோளுக்காக நடராஜர் தன் கிடது காலை ஊன்றி, வலது கால் தூக்கி ஆடிய அருள் வழங்கியதாக கூறப்படுகிறது.
தலைமுறையை தாண்டி நிற்கும் கோபுரம்
மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கோபுரங்கள் சங்க காலத்திற்கு முன்பே கட்டப்பட்டவை. சுமார் 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு பழமையானவை எனவும் ஆராய்ச்சி குறிப்புகள் கூறுகின்றன. சுவாமி கோபுரம் தொடங்கி கிழக்கு ராஜ கோபுரம், தேரடி மண்டபம், ஆறுகால் மண்டபம்,
அம்மன் சன்னதி கோபுரம், மேற்கு இரா கோபுரம், வீர வசந்தராயர் மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம் என மொத்த 12 கோபுரங்களை உள்ளடக்கியது மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இதில் தெற்கு கோபுரம் மிகவும் உயரமானது. 170 அடி உயரம் கொண்ட இக் கோபுரம், 9 நிலைகளைக் கொண்டது.
ஆயிரங்கால் மண்டபம்
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் பிரம்மாண்ட அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 985 தூண்கள் உள்ளன. அக்கால கட்டிடக்கலையில் மொத்த அழகையும் இது விளக்குகிறது. இந்த தூண்டுகளை ஒரு கோணத்தில் நின்று பார்த்தால்,
அவை ஒரே நேர்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மண்டபத்தில், இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன. சிற்பங்கள், ஓவியங்கள், பரதக்கலை முத்திரைகள், இசைத் தூண்கள், தியான சித்திரங்கள் ஆகியவை இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
தற்போது உள்ள மீனாட்சி அம்மன் கோயில் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் அம்மனின் பெயர் திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார் என்றே வழங்கப்பட்டது என்றும் அந்தக் கோயிலில் இருந்த பாண்டிய மன்னர் காலக் கல்வெட்டுகளில் இருந்து தெரியவந்திருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தையும் படிஎடுத்து, அவற்றை வாசித்து, பதிப்பிக்க கோயில் நிர்வாகத்தின் சார்பில் சமீபத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இந்தப் பணிகள் தொல்லியலாளரான சி. சாந்தலிங்கத்திடம் விடப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த கல்வெட்டுகளில் 60 கல்வெட்டுகளை ஏற்கனவே இந்தியத் தொல்லியத் துறை, படிஎடுத்துப் பிதிப்பித்துள்ளது. தற்போது சி. சாந்தலிங்கம் தலைமையிலான அணியினர் இதுவரை வாசிக்கப்படாத 410 கல்வெட்டுகளை கோயிலில் கண்டறிந்து, படித்துள்ளனர்.
இவற்றில் 79 கல்வெட்டுகள் முழுமையானதாகவும் 23 கல்வெட்டுகளில் பெயர்கள் போன்றவையும் சுமார் 300 கல்வெட்டுகள் துண்டு துண்டானதாகவும் கிடைத்திருக்கின்றன. கோயிலில் பயன்படுத்தப்படும் திருவாச்சி விளக்கு, பாத்திரங்கள் போன்றவற்றிலும் சில பெயர்கள் கண்டறியப்பட்டுள்ளன.
படிக்கத்தக்க வகையில் இருந்த 79 கல்வெட்டுகளில் 78 கல்வெட்டுகள் தமிழில் இருந்தன. ஒரே ஒரு கல்வெட்டு கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தது. கோயிலில் இருந்த கம்பத்தடி மண்டபம் கட்டப்பட்டது தொடர்பான கல்வெட்டு தமிழிலும் தெலுங்கிலும் எழுதப்பட்டிருந்தது.
மீனாட்சி அம்மன் கோயிலைப் பொறுத்தவரை, தற்போதைய முழுமையான அமைப்பு என்பது நாயக்கர் காலத்தில் எட்டப்பட்டது. ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நகரின் மையப்பகுதியில் கோயில் இருந்து வந்துள்ளது.
கிழக்குக் கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் சில கல்வெட்டுகள் கிடைத்தன. அவை மாறவர்மன் குலசேகரனுடைய காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டுகளின்படி கோயில் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்குள்ளாகவே,
அதாவது 1250ஆம் ஆண்டுவாக்கில் மிகப் பெரிய சேதத்தைச் சந்தித்திருக்கிறது. கர்ப்பகிரகம், ஏழு நிலை கோபுரம், ஆடவல்லான் சன்னிதி போன்றவை அழிந்து, மீண்டும் கட்டப்பட்டுள்ளன என்ற செய்தி கல்வெட்டில் கிடைத்திருக்கிறது.
“கி.பி. 1190 – 1216ல் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனான ஜடாவர்மன் குலசேகர பாண்டியனின் காலத்தில்தான் இந்தக் கோயில் கல்லால் கட்டப்பட்டது. ஆனால், அந்தக் கோயில் ஏதோ காரணத்தால் அழிந்துவிட,
அவனுக்குப் பின்வந்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கோயில் புதுப்பிக்கப்பட்டது இந்தக் கல்வெட்டுகளில் இருந்து தெரியவருகிறது” என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குனரும் ஆய்வாளருமான சொ. சாந்தலிங்கம்.
1220-1235வரை ஹொய்சாள தேசத்தை ஆண்ட சோமேஸ்வரன் என்ற மன்னன் மதுரையில் வந்து தங்கியிருந்திருக்கிறான். அப்போது அவன் பெயரால் வீரசோமேஸ்வரன் சந்தி என்ற பெயரில் ஒரு பூஜைக்கு ஏற்பாடு செய்து,
அதற்கான நிலக் கொடைகளை அளித்திருக்கிறான் என்ற செய்தியும் கல்வெட்டுகளில் கிடைத்திருக்கிறது. அதேபோல, இந்த மன்னன் கோ சாலை ஒன்றை உருவாக்கி, அதற்காகவும் கொடைகளை அளித்திருக்கிறான்.
மாலிக் காஃபூர் மதுரை மீது படையெடுததற்குப் பிறகு, ஐம்பதாண்டுகளுக்கு கல்வெட்டுகளே இல்லை. அதற்குப் பிறகு, விஜயநகரப் பேரரசு மதுரையை மீட்ட பிறகே மீண்டும் கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன.
புகழ்பெற்ற விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயர் ராமேஸ்வரத்திற்குப் புனித யாத்திரை சென்றபோது மதுரையிலும் அழகர் கோயிலிலும் தங்கியிருக்கிறார். அவர், மீனாட்சி அம்மன் கோயிலில் ஒரு பூஜையை நடத்த, திருஞானசம்பந்த நல்லூர் என்ற ஒரு ஊரையே தானமாகக் கொடுத்திருக்கிறார். 500 பொற்காசுகளையும் கொடுத்திருக்கிறார்.
மீனாட்சி என்ற பெயர் எப்போது சூட்டப்பட்டது?
தற்போது கோயிலின் பிரதான தெய்வங்கள் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படுகினர். ஆனால், கோயிலில் கிடைத்த 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றின்படி, ஆரம்ப காலத்தில் இந்தக் கோயிலில் உறையும் தெய்வத்தின் பெயர் ‘திரு ஆலவாய் உடைய நாயனார்’ என்பதுதான். அம்மனின் பெயர் ‘திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்’.
தேவாரத்தில் இந்தக் கோயிலில் உள்ள கடவுளின் பெயர் ‘அங்கயற்கண்ணி உடனுறையும் ஆலவாய் அண்ணல்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. “தமிழ்நாட்டில் பொதுவாக எல்லா பெண் தெய்வக் கோயில்களுக்கு காமக்கோட்டமுடைய நாச்சியார் என்பதுதான் பெயர். அந்தப் பெயரே இங்கேயும் வழங்கப்பட்டிருக்கிறது” என்கிறார் சாந்தலிங்கம்.
ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியா மற்றும் கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்
கி.பி. 1752ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு பாவை விளக்கில்தான் மீனாட்சி என்ற பெயர் முதன்முதலில் இடம்பெறுவதாகச் சொல்கிறார் இவர். 1898ல்தான் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் என்ற பொறிப்பு ஒரு திருவாச்சி விளக்கில் இடம்பெற்றுள்ளது.
“இந்தக் காலத்திற்கு முன்பாகவே குமரகுருபரர் பாடிய பிள்ளைத் தமிழ் மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் என்றுதான் அழைக்கப்படுகிறது. ஆகவே மீனாட்சி என்ற பெயர் விஜயநகர மன்னர்களின் காலத்தில் வந்திருக்கலாம். ஆனால், கல்வெட்டில் முதன்முதலாக கி.பி. 1752ல்தான் அந்தப் பெயர் காணக்கிடைக்கிறது” என்கிறார் சாந்தலிங்கம்.
இந்தக் கோயிலில் இருந்த ஸ்ரீபாதம் தாங்கிகளுக்கு பல இறையிலி நிலங்கள் வழங்கப்பட்டிருந்தன. 1710வாக்கில் அந்த இறையிலி நிலங்களை விஜயரங்க சொக்கநாதன் மீண்டும் எடுத்துக்கொண்டனர். இந்தப் பிரச்சனையில் பாதந்தாங்கிகளில் ஒருவர் கிழக்குக் கோபுரத்தில் ஏறி கீழே விழுந்து உயிரை விட்டார். இந்தச் சம்பவம் ஒரு கல்வெட்டில் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கிறார் சாந்தலிங்கம்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கிழக்கு வாயில் வழியாக கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இப்போதும் கிழக்கு வாயில் வழியாக கோயிலுக்குச் செல்பவர்கள் மிகவும் குறைவுதான்.
காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் இந்தக் கோயிலுக்கு ஒரு லட்சம் வராகன்களை இந்தக் கோயிலுக்குக் கொடுத்திருக்கிறார். அவர் அங்கே ஒரு பள்ளிக்கூடத்தை உருவாக்கி ஆங்கிலமும் தர்க்கமும் கற்பிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்.
இந்தக் கல்வெட்டுகளில் மீனாட்சி அம்மன் சன்னிதியின் வடக்குச் சுவரிலும் சொக்கநாதர் சன்னிதியின் வடக்குச் சுவரிலும் பல கல்வெட்டுகள் முழுமையாகக்கிடைத்திருக்கின்றன.
மற்றுமொரு குறிப்பிடத்தக்க விஷயத்தையும் சாந்தலிங்கம் சுட்டிக்காட்டுகிறார். “எல்லாப் பெரிய கோயில்களிலும் தேவரடியார்கள் உண்டு. ஆனால், இதுவரை நாங்கள் படித்த கல்வெட்டுகளில் தேவரடியார் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. தேவரடியார் வழக்கம் சோழ நாட்டோடு ஒப்பிட்டால் பாண்டிய நாட்டில் குறைவு என்ற செய்தியோடு இதனைப் பொருத்திப் பார்க்க வேண்டும்” என்கிறார்.
கோயிலைச் சேர்ந்த கல்வெட்டுகளைத் தவிர, வைகை நதிக் கரையில் கண்டெடுக்கப்பட்டு தற்போது கோயிலின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு கல்வெட்டையும் ஆய்வாளர்கள் படித்துள்ளனர். அந்தக் கல்வெட்டு கி.பி. 700ஆம் ஆண்டைச் சேர்ந்தது. நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. அதில் வைகையில் கால்வாய் வெட்டி, மதுரை தவிர்த்த வேறு பகுதிகளுக்கு நீரைக் கொண்டு சென்ற தகவல் இருக்கிறது.
முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களான திருமலை நாயக்கர், விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆகியோரது கல்வெட்டுகள் இங்கு கிடைத்திருக்கின்றன. இங்கு இருப்பதிலேயே மிகப் பழைமையான கல்வெட்டு கி.பி. 700ஆம் ஆண்டைச் சேர்ந்தது. அரிகேசரி பராங்குச மாறவர்மன் காலத்தைச் சேர்ந்தது. 1898ல் ஒரு விளக்கில் கிடைத்த பொறிப்புதான் காலத்தால் புதியது.
கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளைப் படியெடுத்து படித்த இந்தக் குழுவில் மதுரை அருங்காட்சியகத்தின் பாதுகாவலர் மருது பாண்டியன், பாண்டிய நாடு வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆர். உதயகுமார், மாநில தொல்லியல் துறையைச் சேர்ந்த பி. ஆசைத்தம்பி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
தற்போது இந்தக் கல்வெட்டுகள் தொகுக்கப்பட்டு, அவற்றின் பொருள் தற்காலத் தமிழில் விளக்கப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் விரைவில் அதனைப் பதிப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு: கோயில் காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்